×

ஜல்லி கல் ரோட்டில் வாகனங்கள் திணறல்

 

கோவை, ஆக.14: கோவை உக்கடம்-ஆத்துப்பாலம் இடையே 1.9 கிமீ தூரத்திற்கு மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. பாலக்காடு ேராடு மற்றும் பொள்ளாச்சி ரோட்டில் இறங்கு தளம் அமைக்க பில்லர் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே இணைப்பு பகுதிக்கான வேலைகள் நடக்கிறது. பகல், இரவு நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வாகனங்கள் பல நிமிட நேரம் காத்திருந்து ஆத்துப்பாலத்தை கடக்க வேண்டியிருக்கிறது. உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள், பொள்ளாச்சி ரோடு, பாலக்காடு ரோட்டில் இருந்து உக்கடம் நோக்கி வரும் வாகனங்கள் நெரிசலில் திணறுவது வாடிக்கையாகிவிட்டது.

வாகன நெரிசல் காரணமாக இந்த பகுதியில் மேம்பால பணி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆத்துப்பாலம் நொய்யல் ஆற்றின் பாலத்திலிருந்து குளக்கரை வரையுள்ள ரோடு பழுதாகி கிடந்தது. ஜல்லி கற்கள் பெயர்ந்து கரடு முரடாக கிடந்தது. இங்கே புதிதாக ரோடு போடப்பட்டது. ஆனாலும் சில இடங்களில் ஜல்லி கற்கள் குவிந்து போக்குவரத்திற்கு தடையாக இருக்கிறது. பாலத்தின் கீழ் பகுதி ரோடு, சந்திப்பு பகுதிகளில் நெரிசல் தடுக்கும் வகையிலான போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர் பணிகள் நடத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

The post ஜல்லி கல் ரோட்டில் வாகனங்கள் திணறல் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Coimbatore Ukkadam-Athupalam ,Palakkad Eradu ,Dinakaran ,
× RELATED யூடியூபர் சங்கருக்கு மருத்துவ பரிசோதனை